துறு துறு காதல்-வித்யா
என் வாழ்க்கை வட்டத்தின்
பாதி விட்டமாய் மாறி
முதல் ஆரத்திலேயே
நான் தொலைந்து போனதை
பறைசாற்றியவனே..............!
உலக வரைபடத்தில்
கடல் வண்ணம்
தீட்டுகையில் சட்டென்று
முத்தமிட்டவனே......!
மோடமான வானிலையென்று
வானிலை அறிக்கையில்
சொல்லி இருக்கையில்.....
என் வானில் மட்டும்
வானிலை மாற்றம்
நிகழ்த்தியவனே............!
ஆவர்த்தன அட்டவணையில்
ஒழிந்துகொண்டு
அணுக்கரு உலையில்
ஆட்சி செய்பவனே........!
ஷேக்ஸ்பியர் கதைகளின்
முத்தக்காட்சிகளில் எல்லாம்
வருகைப்பதிவு செய்பவனே.......!
பாகை அளவுகளில்
பதுங்கிக்கொண்டு
புன்னகைப்பவனே..............!
காந்தப்புலத்தில்
மின்விசை பாய்ச்சி
காதல் ஆராய்ச்சி
செய்பவனே...........!
என் மடிக்கணினியின்
உணர்வுப்பகுதியில்
சுட்டெலியென
சுட்டுவிரல் பற்றிக்கொண்டு
திரிபவனே............!
தீர்க்கப்படாத கோட்பாடு
ஒன்றின் முதல் சமன்பாட்டில்
உனை நான் பிரதியிட
தீர்ந்தே போனோம்........
கோட்பாடும் நானும்.......!
அவனுக்கு நான் டோரா......
எனக்கு அவன் பீம்.......
உலகிற்கு நாங்கள்
TOM AND JERRY ...........!