காரணம்

தவறுகள் செய்த பொழுதெல்லாம்
இமைப்பொழுதும் இதயம் நோகாமல்
சிரித்திருந்தாய் இனியவளே !,

தவறே செய்யாத தருணத்தில்
காரணத்தை சொல்ல கூட
தடை விதித்தாயடி !,

மலையளவு தவரிளைத்தாலும்
கடுகளவும் அன்பு குறையாத காரிகையே !,
உன் காதல் மனம் நோக
வார்த்தை என்ன சொல்லிவிட்டேன் ?,

மௌனம் கலைத்து வார்த்தை பேசிவிடு
என் காரணம் சொல்ல
ஒரு நொடி நேரம் ஒதுக்கிவிடு
உன் நெஞ்சின் ஓரம்
கொஞ்சம் ஈரம் ஒதுக்கிவிடு !...

எழுதியவர் : மதுமிதா .கு (17-Mar-14, 3:48 pm)
Tanglish : kaaranam
பார்வை : 79

மேலே