உனக்காகவே நான்

நீ பேசும் வார்த்தைகளில் அன்பு இல்லை எனினும்
உன் குரலுக்கு அடிமையானேன் ;

நீ என் அருகில் இல்லாத நேரங்களிலும் உன்
ஸ்பரிசத்தை உணர்ந்தேன் ;

நீ சொல்லும் உண்மையிலும் எனக்காக நீ சொல்லும்
பொய்யை ரசித்தேன் ;

நீ பார்க்கும் நேரங்களில் நான் ஊமையானேன்
நீ என்னை வெறுத்த நேரங்களில் உன்னையே விரும்பினேன் ;

நீயும் நானும் வாழ போகும் நாட்களை நினைக்கையில் நானும் ஒரு இயக்குனரானேன் ;

நீ என்னருகில் இல்லாத நாட்கள் வெறும் கானல்
நீரே;

நீ என்னை வெறுத்த நேரங்களில் நான் கண்ணீர் விட்டாலும் உன்னையே விரும்பினேன் ;

என் உதிரமும் உன் பெயர் சொல்லுதடா ;
என் உள்ளமும் உனக்காகவே ஏங்குதடா;

உன்னோடு நான் வாழவே யுகங்கள் பல நூறு தேவை ,
நீ இல்லாமல் நான் வாழ நொடி நேரம் கூட மறுக்க பட்டவையே ;

வலிகள் கோடி அடைந்தும் உன் வார்த்தைக்காகவே நான் நானாக உனக்காகவே வாழ்கிறேன் ;

என்றும்" உனக்காகவே நான்" காதலியாய்,
தோழியாய் ;;;;;;;;;;;;;;;;;;;;;;;

எழுதியவர் : ச.நிவேதா ஸ்ரீ (17-Mar-14, 4:20 pm)
Tanglish : unakaakave naan
பார்வை : 142

மேலே