உடன் பிறவா அக்கா
![](https://eluthu.com/images/loading.gif)
உடன் பிறவா
சொந்தமிது
எனை ஊக்குவிக்கும்
பந்தமிது
நிலையில்லா
வாழ்க்கையிலும்
நிஜமுள்ள
உறவு இது !
இரு ரத்தம் வேறு
ஆனாலும்
இந்த அன்பின் வேர்
ஆழமென
நித்தமும்
உணர்விப்பாள் !
பசிக்கு
சோறூட்டினாள்
வளர்ப்புத் தாய்
இவன் ருசிக்க
சோறூட்டினாள்
என் அக்கா !
இவள்
என் மடமைகளை
போக்கி
பாசம் எனும்
உடைமையை
தன் வசம் வைத்து
என்னை
வழிநடத்திக்
கொண்டிருக்கும்
என் அக்கா
எனக்கென்றும்
தெய்வம் !