மனித தரங்கெட்டது போதும்

'' மனித தரங்கெட்டது போதும் ''

'' மனிதா சாதிகளால் இனச்சங்கங்களை
அமைத்தது போதும் //
'' மனிதா பாவிகளால் சிலர் வஞ்சகங்களை
செய்தது போதும் //
'' மனிதா தோல்விகளால் மனிதன் மனங்களை
முடக்கியது போதும் //
'' மனிதா துறவிகளால் காவியாடைகளில் பிச்சை
எடுத்தது போதும் //
'' மனிதா வேள்விகளால் மூட நம்பிக்கையை
நம்பியது போதும் //
'' மனிதா நீதி மன்றங்களால் பொய்மையையும்
வாய்மைப்படுத்தியது போதும் //
'' மனிதா பேட்ச்சிகளால் மட்டும் அரசியலில் ஆட்ச்சியைப்
பிடித்தது போதும் //
''மனிதா பொய் சாட்ச்சிகளால் ஆறம் போற்றி வாழ்ந்தவனை புறம்
தள்ளியது போதும் //
'' மனிதா சூழ்ச்சிகளால் மக்களை மாக்கள்
ஆக்கியது போதும் //
'' மனிதா காட்ச்சிகளால் தந்திரங்களையும்
மந்திரமாக்கியது போதும் //
'' மனிதா இகழ்ச்ச்சிகளால் மா - மனிதனையும்
மறக்கச்செய்தது போதும் //
'' மனிதா புகழ்ச்சிகளால் போலிச்சாமிகளை
மேலோக்கியது போதும் //
'' மனிதா வரட்ச்சிகளால் விவசாயின் முதுகெலும்பை
ஒடித்தது போதும் //
'' மனிதா புரட்ச்சிகளால் அப்பாவிகளையும்
சாம்பலாக்கியது போதும் //

எழுதியவர் : சிவகவிதாசன் (17-Mar-14, 4:55 pm)
பார்வை : 105

மேலே