துண்டு - பூவிதழ்

உள்ளூர் வங்கியில் சேமிப்பு கணக்கு இல்லை
உலக வங்கியில் என்பெயரிலும் கடன் கணக்கு
ஓட்டு என்னிடம் கேட்டுவாங்குகிறான்
கடன் என்னிடம் கேட்டா வாங்குகிறான்
வாங்கிய கடனிலும் உனக்குப்பங்கு
வட்டியும் கடனும் என்பங்கா
வாழும்போது கையிலும் பையிலும் காசுஇல்லை
செத்தபின்னும் கட்ட கடனிருக்கு
உங்கள் பட்ஜெட்டில் மட்டுமா துண்டு
எங்கள் தலையிலும்தான் !