கணக்கு

ஓன்று ஓன்று என்றும்
இறைவன் ஓன்று !
ஒன்றும் இரண்டும் மூன்று
ஒற்றுமையாய் இருப்பது நன்று !
மூன்றும் ஒன்றும் நாலு ! நான்
மறைகளும் கற்றுத் தேறு !
நாலும் ஒன்றும் ஐந்து
ஐம்புலன் அடக்கம் வேண்டும் !
ஐந்தும் ஒன்றும் ஆறு
அறிந்தோம் என்று ஆடாதே !
ஆறும் ஒன்றும் ஏழு
எழுந்தால் வாழ்வு ஒளிரும்!
ஏழும் ஒன்னும் எட்டு
எட்டெட்டில் கிட்டா வாழ்வு தெற்று !
எட்டும் ஒன்றும் ஒன்பது
எற்புடை செயலில் மாண்பதை ஒது !
ஒன்பதும் ஒன்றும் பத்து
பெற்றோரே என்றம் சொத்து !
அறிந்தால் வாழ்க்கை முத்து !
மறுத்தால் நானே சுழியம் !

சரோ

எழுதியவர் : சரோ (17-Mar-14, 10:27 pm)
Tanglish : kanakku
பார்வை : 211

மேலே