அழகோவியம்
கருங்குவியல் அருவிக் கூந்தல்
மூன்றாம் பிறை திரும்பியனெற்றி
உயரத்திலிருக்கும் நிலவுதிலகம்
இருபுருவமும் வானவில்லோ...!!?
தூண்டிலாக வளைந்த நாசி !
தேன் தளும்பும் ஈரிதழ்கள்!
கன்னங்களிரண்டும் பன்னீர் ரோஜா!
கமல மொட்டாய் இருகாதுமடல்கள்...!
எப்படி பிரம்மனுனை படைத்தானோ!!?
படைத்து பின் மயக்கத்தில் வீழ்ந்தானோ!
உன்முகத்தை பார்த்தே மூர்சையானேன்!
படைத்த பிரம்மன் என்னானோ!!?
மூர்சை தெளிந்து சற்றே நிமிர்ந்தேன்!
சங்கு கழுத்தில் மின்னல் ஒளி கண்டு
சக்தியற்று சரிந்தேனே! எத்தனை பிறவி எடுத்தே முழுதாய் உன் அழகை காண்பேனோ..!!?
பாவி பிரம்மன் உனை படைத்து
எனக்கும் இருகண் படைத்து...
விண்ணில் பறந்து போனானே!
நெஞ்சில் நெருப்பை தைத்தானோ !!
தங்கத்தை தேன்கிண்ணத்தில் குழப்பி
மேனியெல்லாம் பூசிவிட்டானோ!
தேன்கிண்ண மிரண்டை முன்னழகில்
வைத்து மறந்து போனானோ !!
நதிகளின் வளைவுகள்
இடைதனில் நான் கண்டேன்...!
அதன் நடுவினில் சுழலொன்று
சுழன்றிட கண்டு வியந்தேன்...!!
இருபுறமும் பூமாலை நெருங்ககட்டி
மேனியில் இணைத்தது போல்
இருகரம் கண்டேன்....!
கமலப் பாதத்தில் வரம் கேட்டேன்!!
இடை வளைவுகள் முடிவினிலே
இரு சந்தன மரமிளைத்து அதில் தேன்குழைத்து
இடையசைவைத் தாங்கிட
இருபுறமும் தூண்கள் கண்டேன்...!!
உனை உயிர்சிதிரமாக்கிய ஓவியன் யாரோ?!!
என் நித்திரை தொலைக்கச் செய்தவள் நீயே!
திரைகடலோடியும் திரவியம் சேர்த்து
திரையினை விளக்கச் செய்வேன் !!