பிடிக்கிறது

இப்பொழுதெல்லாம்
காற்றை எதிர்க்கும் படிக்கட்டுப்
பயணம் பிடிக்கிறது
பைக்கில் கைகளை சிறகென
விரித்துப் பறக்கப் பிடிக்கிறது
பாடல்கள் கேட்கப் பிடிக்கிறது
தனி அறையில் முடங்கப்
பிடிக்கிறது
கண்ணாடியே கதி என கிடக்கப்
பிடிக்கிறது
எப்பொழுதும் பாக்கெட்டில்
சீப்பு வைத்துக் கொள்ள
பிடிக்கிறது
உதட்டின் மேல் அரும்பிய மீசையும்
பிடிக்கிறது
எதிர் வீட்டு திவ்யாவின் மேல் வந்த
ஆசையும் பிடிக்கிறது !!!

எழுதியவர் : அச்சில் ஏறா கவிதைகள (18-Mar-14, 3:56 pm)
Tanglish : pidikkiradhu
பார்வை : 97

மேலே