ஈரோட்டுக் கவிஞருக்கு என் வணக்கங்கள்
செதுக்கப்படாத கல் நான்.
செந்தமிழும் அறியாதவன் நான்...
பேசுகிறேன்....
பிழை பொறுத்து அருளுங்கள்.
அன்ப!
உயிர்மை ததும்பும் உன் தமிழை...
"அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்ச"த்தில் கண்டது
என் இளவேனில் காலம்.
"சிலிர்ப்புகள்" மிக....
அலையத் துவங்கியது...
"என் கண்ணுக்கு வெளியே சில கனாக்கள்".
என் "விடியல் விழுதுகள்"
"என் வீட்டிற்கு எதிரே ஒரு எருக்கன் செடி"
எனக் கிடந்த...
"என் பழைய பனை ஓலைகளை" நகர்த்தி விட்டு...
வாசிக்கத் துவங்கியிருந்தது...
உன் "மதிப்பீடுகளை".
இன்று..எண்பதைத் துவங்கும் உங்களிடம்...
"இவர்களோடும்...இவரோடும் (திரு.அகன்)"
"என் வார்த்தைகள் கேட்ட வரம்"...
"வணக்கம்! வள்ளுவ!"...
"உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன்..."
உன் "கதவைத் தட்டிய பழைய காதலியாய்"
உன் அன்பின் "மின்னல் உறங்கும் பொழுதில்"..
என் "கனாக் காணும் வினாக்கள்.."
"நடை மறந்த நதியும் ...திசை மாறிய ஓடையுமாய்"
திரிந்து விட...
"கருவறையிலிருந்து ஒரு குரல்" கேட்கும்...
"பாரதிதாசனோடு..பத்தாண்டுகள்" வாசித்தவரிடம்...
எப்பொழுது நிகழும் என் ஒரு கணத்து சந்திப்பு..என.
இன்று...தமிழ் பிடித்து நடந்தவரை...
தமிழ் வாழ்த்தும் என்றாலும்....
நான் "சொல்ல வந்தது"...
"தமிழிற்கு எதற்குத் தனியாக வாழ்த்துப் பா?.