துளிப்பாக்கள்-சிவநாதன்

+++++++++++++++++++

பாய் விரித்தது கட்சி
குப்புறப் படுத்தது
கொள்கை

++++++++++++++++++++
கொட்டிக் கிடக்கிறது
தாராளமாய் குப்பையில்
சமத்துவம்

+++++++++++++++++++++

பீர் போத்தலுடன்
வேட்பு மனு தாக்கல்
மதுவிலக்கு கட்சி
++++++++++++++++++++++++

சிதறியது சில்லறை
தேட முடியாது!
போட்டது குருடன் வேடம்
++++++++++++++++++++++++++
மொய் உண்டானால் இடமுண்டு
திருமண அழைப்பிதழில்
புது வாசகம்

+++++++++++++++++++++++

காய்ந்து காய்ந்து
கருகியதோ
நிலவைக் காணவில்லை

++++++++++++++++++++++++

எழுதியவர் : சிவநாதன் (19-Mar-14, 9:38 am)
பார்வை : 132

மேலே