மலர் மங்கை

மலரும் மங்கையும் ஒரு சாதி !
மனதை மறைப்பதில் சரிபாதி !
மகத்தான சக்தி மகளிரே ஆவார் !
மாசற்ற மாண்புமிகு சக்தி மகளிரே !
மாறாத அன்பினால் ஆளும் சக்தி !
அம்மா ' என்றால் தாய் ஆவாள் !
அன்னை ' என்றால் அருள் புரிவாள் !
குரலினில் இனிமை !உடையினில் எளிமை !
வார்த்தையில் மேன்மை !வாழ்க்கையில் உண்மை !
நடையினில் நளினம் !விழியினில் கருமை !
உள்ளமோ வெண்மை !உறவாடும் தன்மை !
மங்கையே !! நீ நான் சூடும் வசந்த மலர் !
குடும்பத்தின் விளக்கே ! பெண்மையே வாழ்க !
கல்வியறிவில்லாத பெண்கள் தாமும்
களர் நிலனுக்கு ஒப்பாவர் என்பான் கவிஞன் !
புல்லொருகால் அன்நிலத்தே விளைதல் கூடும் !
புகழ் சேர்க்கும் புதல்வர்களே பிறவார் என்பேன் !
கல்வி யறிவு உள்ளவராம் பெண்கள் தாமும்
கழனியது திருந்திய தற்கொப்பாம் என்பான் !
நல்லறிவர் அன் நிலத்தே தோன்றல் உண்டு !
மலராய் மங்கையர் தாம் இருந்த நிலை
மாறும் ;மலர்க்கரங்கள் இன்று முதல்
மாசற்றப் பொற்கரங்கள் ஆகி விடும் !
மகளிரெல்லாம் கல்வியினால் ஓங்கி நின்றால்
மருத்துவமே அவ்வீட்டில் தேவை இல்லை ;
மகளிர் எலாம் அரசியல் கைப்பற்றி ஆண்டால்
மாநிலத்தில் போரில்லை ;இல்லை என்பேன் !
பகையில்லை ;இன்மையிலை ;பிணியும் இல்லை !
பழி ஏதும் வந்துறவே வாய்ப்பும் இல்லை ;
வகையான உலகொன்று சமைத்தல் கூடும் !
வளம் அங்கே மண்டியிடல் காணக் கூடும் !!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (19-Mar-14, 3:37 pm)
Tanglish : malar mangai
பார்வை : 78

மேலே