நம்ம ஆளு பெரிய ஆளு

நம்ம மந்திரிக்கு வெளிநாட்டில் பொது வேலைகள் எல்லாம் எப்படி நடை பெறுகிறது
என்பதை பார்பதற்கு ஆசை ! அதற்காக வேண்டி பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்றார் !
அங்கு பணிகளை எல்லாம் பார்வை இட்டு பின்னர் , பிலிப்பைன்ஸ் மந்திரி அவரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார் !

நம்ம மந்திரி வீட்டின் பிரமாண்டமான அமைப்பை கண்டு வியந்து இது எப்படி
சாத்தியமானது என்று வினவினார் !

பிலிப்பைன்ஸ் மந்திரி அதோ தெரிகிறதே 5மீட்டர் மேல் பாலம் !

நம்ம மந்திரி ஆமா தெரிகிறது !

பிலிப்பைன்ஸ் மந்திரி அதில் வந்த சில்லறைத்தான் இது என்றார்

ந . மந்திரி வியப்போடு நின்றார் !

சில வருடங்களுக்கு பிறகு பிலிப்பைன்ஸ் மந்திரி நம்ம நாட்டை பார்க்க வந்தார் ! அவரை நம்ம மந்திரி
தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார்

பிலிப்பின்ஸ் மந்திரி மிக பிரமாண்டமான வீட்டின் அமைப்பைகண்டு இது எப்படி
சாத்தியமானது என்று கேட்டார்?

நம்ம மந்திரி அதோ தெரிகிறதே 8மீட்டர் மேல்பாலம் ...

பிலிப்பைன்ஸ் மந்திரி தெரியவில்லையே !!!

நம்ம மந்திரி ஆம் ! அதுதான் இது என்றார் .

பிலிப்பைன்ஸ் மந்திரி !!!!!!!!!!!!!!

எழுதியவர் : (19-Mar-14, 11:37 pm)
பார்வை : 231

மேலே