புனைப் பெயரும் படும் பாடும்

ஒருவர் தன் பெயரை மாற்றி முகனூலில்
கணக்கு வைத்தார் .
பெண்கள் மட்டுமே நட்புவட்டத்தில் ...
இவரை போல இவரது மனைவியும் புனைபெயரில் ...
ஒருநாள் ...
புதிதாய் புனிதா என்ற பெண்ணை அரட்டைக்கு அழைத்தார் ...
இருவரும் விளக்கமாய் தகவல்களை பரிமாற...
நட்பும் வலுத்தது ...
அன்யோநியமாய் பலபொய்களையும் சில மெய்களுமாக ...
ஒருநாள் இருவரும் முகம் பார்க்க ஆசைகொண்டு இருவரும் ஓரிடம் தீர்மானித்தனர் ...
குறித்தநேரத்தில் இடம் வந்தும் ஒருவரைஒருவர் பார்க்காமல் ஒவ்வொருவரும் மறைந்தனர் ...
மீண்டும் அடுத்தநாள் அரட்டையில் இணைந்தனர்...
புனிதா :நேற்று ஏன் வரசொல்லி நீங்கள் வரவில்லை டார்லிங் ...
குணா:டார்லிங் ...நான் வந்தேன் உனைத்தான் காணாமல் தவித்தேன் ...
புனிதா : சாரி டார்லிங் ...நானும் வந்தேன் ஆனால் ஒரு சனியன் வந்து கெடுத்துரிச்சி...
குணா :பரவாயில்லை டார்லிங் ...அதே நிலைமைதான் எனக்கும் ...மூதேவி வந்து தொலைச்சிருச்சி ...
புனிதா :டார்லிங் ...இப்பயாச்சும் அந்த உண்மையை சொல்லகூடாதா ?
குணா : எதை பற்றிக் கேக்குற செல்லம் !
புனிதா :நேற்று மூதேவி வந்துதுன்னு சொன்னிங்களே அது யாரு ?
குணா :அதுவந்து ...அது ...என் மனைவி...உமா ...ஆமா சனியன் வந்துச்சுன்னு சொன்னியே அது யாரு டார்லிங் ...
புனிதா :.........சிகப்பு விளக்கு ........(.ஐயோ தப்பா நீங்க நினைக்காதிங்க ...அரட்டை முடுஞ்சது ...எதிரில் அணைந்த விளக்கு அப்புறம் எறியவே இல்லை ...)

எழுதியவர் : கனகரத்தினம் (20-Mar-14, 7:20 am)
பார்வை : 148

மேலே