விதியின் விளையாட்டு9

ரிஷானியின் வீட்டில் திருமண சம்மந்தமான பேச்சு நடைபெற்றுக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டே உள்ளே வந்தாள் ரிஷானி......!


அவளுடைய தந்தை தாயாரிடம் என்னமா அவகிட்ட லீவு போட சொல்லிட்டியா? அப்புறம் அவ முதலிலேயே சொல்லவில்லை என்று கோவிச்சிக்க போறா என்று பேசிக்கொண்டிருக்கின்றன........


காதில் விழுந்த அவர்களது வார்த்தைகளை கேட்டுக்கொண்டு தன் அறைக்குள் சென்ற ரிஷானியின் நினைவுகளோ கல்லூரியை நோக்கி சென்றது!!!!!


மதன் அவளிடம் வந்து பேசிய நினைவலைகள் ஒடிக்கொண்டிருந்தது.

ரிஷானியிடம் மதன்"அந்த பொண்ணு 3 வருடங்களாக என்னை காதலிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தாள், தினமும் என்னைப்பார்ப்பாள் நான் கண்டுகொள்ளவில்லை இது இந்த கல்லூரிக்கே தெரிந்த விஷயம்,,,,,,நீ முதலாமாண்டு என்பதால் தெரிய வாய்ப்பில்லை, இப்போது உன்னிடம் வந்து நான் காதலை சொன்னதும் அவள் பார்த்திருக்கிறாள் அதான் அந்த கோவத்தில் என்னிடம் வந்து தவறுதலாக பேசிவிட்டாள்".......! என்று மதன் சொன்னதை நினைத்தவள் சுய நினைவுக்கு வந்தாள்........



அதன் பிறகு மறுபடியும் யோசனையில் மூழ்கினாள் இந்நேரம் அவளின் மனதில் மனோஜ்....!

மனோஜின் கண்ணிலும் பேச்சிலும் காதல் கனிந்து கொண்டிருந்தது ஆனால் அவன் வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை வீட்டில் கேட்க சொன்னானே??????


அப்பாவிடம் கேட்கலாமா?

அதற்குமுன் அவன் தந்த பேப்பரில் என்ன இருக்கிறது என்று பார்க்கலாமா? என்று யோசித்தவள் அந்த பேப்பரை எடுத்தாள்...,

அந்த பேப்பரில் அவனுடைய முழு விபரமும் ஜாதகம் நகலும் இருந்தது அதைப்பார்த்ததும் மீண்டும் அதிர்ந்தாள் ரிஷானி..........

இந்த வீட்டில் திருமணம் என்றால் அக்காவுக்கும் எனக்கும்தான்,,,,,,,,,

ஆனால் போன வாரம்தானே! ஒரு நல்ல வரன் வந்தது என்று அப்பா அந்த ஜாதகத்தை கொண்டு குடும்ப சாமியாரை பார்க்க போனபோது அக்காவின் ஜாதகப்படி இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு திருமணம் செய்யக்கூடாது என்று கட்டளையிட்டு சொன்னதாக அப்பா வந்து சொன்னார்.........


"அப்போ இந்த ஜாதகம் எதற்கு?
கண்டிப்பாக அக்காவுக்கு இல்லை" என்று மனதில் நினைத்தவள் தன் பெற்றோரிடமே கேட்கலாம் என்று அந்த ஜாதகத்துடன் சென்றாள்...........


மதனின் தங்கை மதன் இருக்கும் நிலையை அறிந்து என்னவென்று விசாரித்தாள்?????

மதனோ எதுவும் சொல்லவில்லை.....

அண்ணா! நீ மௌனமாக இருந்தாலும் உன் இந்த கவலைக்கு காரணம் என்னவென்று தெரியும் என்று புதிர் போட்டு பேசினாள் ....!

மதன் புரியாததை போன்று என்னவென்று கேட்டான்......

நடிக்காதே திருடா! உன் கல்லூரிக்கே தெரியும் சொந்த தங்கை எனக்கு தெரியாதா என்ன????

நானே போய் நாளை என் அண்ணியிடம் பேசி நல்ல முடிவாக சொல்கிறேன் 1நாள் காத்திரு என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்........

ஏய் நீ போய் புது வம்புல மாட்டிவிட்டிராத, அம்மாக்கிட்ட சொல்லிராதடி!என் தங்கம் இல்ல என்று கொஞ்சினான்.....!

சரி, சரி எந்த பிரச்சனையும் இல்லாம நான் சமாளிக்கிறேன் என்று சொல்லி ஒரு வித தைரியத்தை கொடுத்தாள்.

மதனும் ரிஷானியின் நினைவுகளுடன் அடுத்த நாளுக்காக காத்துக்கொண்டிருக்கிறான்..........







விதி தொடரும்

எழுதியவர் : ப்ரியா (20-Mar-14, 12:50 pm)
பார்வை : 252

மேலே