நம்மில் பலர்

அசிங்கபட்டதை அகத்தில் வைத்து முகத்தில் புன்னகையோடு வந்தால் -
நீ தலைவன்

கை கட்டி மெய் வறுத்தி - சம்பளத்தன்று மட்டும் ராஜநடை பயின்றால் - அட நீ நல்ல தொழிலாளி

உயிருக்கு நிகரான காதலை கயிறு கட்டி கிணற்றில் விட்டுவிட்டு - பெற்றவர் மனம் கோணாமல் - தன் மனம் செத்தது தெரியாமல் திருமண புகைப்படத்தில் புன்னகைத்தால் - நல்ல மகன்

காற்று படாமல் வளர்த்த தங்கையை - தக்காளி சட்டினியில் உப்பில்லை என - காயபடுத்திய மச்சானின் கைக்கு - தலை தீபாவளிக்கு - மனவலி மறைத்து மோதிரமிட்டால் - நீ நல்ல நடிகன்

மகனுக்கு 2000 ரூபாயில் reebok shoe - ஏர் மாடு வித்து கல்லூரிக்கு கட்டணம் கட்டிபடிக்க வச்ச அப்பாவுக்கு 150 ரூபாயில் paragon வாங்கி கொடுத்து - குற்ற உணர்ச்சி உன்னை குத்தவில்லை எனில் - நீ நாகரிக அப்பா

ஊரிலிருக்கும் ரெண்டு ஏக்கர் நிலம் விற்று ஊரப்பாக்கம் தாண்டி - அபர்ட்மெண்ட் வாங்கலாம் எனும் மனைவியின் வார்த்தைக்கு மதிப்பளித்தால் - அட நீ நல்ல கணவன்

எழுதியவர் : (20-Mar-14, 6:02 pm)
சேர்த்தது : அன்பரசு
Tanglish : nammil palar
பார்வை : 84

மேலே