கிரிக்கெட் திருவிழா

பன்றி காய்ச்சல் போய்
பறவை காய்ச்சல் போய்
டெங்கு காய்ச்சல் போய்
T்_20 காய்ச்சல் வந்து விட்டது
கோடிகள் புழங்கும்
கோலாகல திருவிழா....!
விளம்பரத்திற்கு இடையில்
கிரிக்கெட் போட்டு
கல்லா கட்டும்
கிரிக்கெட் வாரியம்
உண்ண மறந்து
உறங்க மறந்து
படிப்பை மறந்து
பணியை மறந்து
நகம் கடித்து
பதை பதைப்பாய்
பவர் கட் ஆகிட கூடாதென்று
ஆண்டவனுக்கு மனுப் போட்டு
நேரலை காணும் ரசிகன் ஏமாளி....
ஏலத்தில் சில கோடிக்கு போனவன்
சூதில் பல கோடி பெறுகிறான்...
அவன் பந்தை பிடித்தாலும் பணம்
தவற விட்டாலும் பணம்
அடித்தாலும் பணம்
அவுட் ஆனாலும் பணம்
கோடிகளில் மிதக்கும்
சில கேடிகளுக்கு
தெரிவதில்லை
அவர்களே கடவுள் என்று
மனத்தில் வரித்து
அணி வெல்ல ஆண்டவனை
பிரார்த்திக்கும் அப்பாவி தேசமிது....

எழுதியவர் : சித்ரா ராஜ் (20-Mar-14, 7:38 pm)
Tanglish : cricket thiruvizaa
பார்வை : 122

மேலே