வாழ்க்கை வாழத்தானே

பிறந்தோம்! இறப்போம்!
பிறந்த மேனியாய் ...
எது தான் உன் மானம்
இருக்குபோது இழந்திட்டாள்
அதுவே தன்மானம்...!

ஊரையடித்து உலையிளிட்டால்
ஆங்கே பிறக்குமாம் அகந்தை
ஆணவச் செருக்கெனும் எருக்கு!!
ஈனப் பிறவியென பலர் வாயில்
விழுந்து வாழ்வதும் வாழ்வா!!?

செருப்பைத் துடைத்து
அழுக்கை களைத்து
சிகையை அலங்கரித்து
சாக்கடைச் சீர் செய்யும்
தொழிலாளி வாழ்வே மேலாகும்!!

கொட்டிய பணத்தை கட்டி வைத்து
ஏழை வாழ்வு கெட்டிடச் செய்யும்
செயலும் செயலோ!!?
தினமொரு பெண்மேனியை
அணைத்திடத் துடித்து
கட்டிலில் கிடைத்திடும் நீயும் பிணமே!!

கருத்த மேனி மெலிந்த தேகத்தில்
ஒட்டிய வயிறுடன் தினம் உழைத்திடும்
கோவணத் துணியும் மிளிரிடும் அழகு !உண்ணினும் அழகென்பேன் !

உச்சி முதல் பாதம் வரை
கனகத்தால் மறைத்தாலும்
நீயும் அசிங்கமடா...!
நீயும் உண்டு பிறர்க்கும் கொணர்ந்து
தொண்டு செய்வது சிறப்பு...!
அதற்கே இம்மனிதப் பிறப்பு...!!

கண்ணீர் குடித்து
இதயத்தில் நுழைத்திடும்
நீயும் இயந்திரம் தானோ?
இரத்தமும் சாக்கடை தானே!!?

பிறக்கும் போதே இறைவன்
குறித்தான் இறுதி திகதியை...!
ஒப்பனையாக ஒரு ஊர்வலம் எதற்கு?
இதுதான் உன் முடிவென்றால்
உன்பாதச் சுவடும் இத்துடன் தொலையட்டும்.!!

எழுதியவர் : கனகரத்தினம் (21-Mar-14, 12:23 am)
சேர்த்தது : கனகரத்தினம்
பார்வை : 305

மேலே