இருந்ததும் இழந்ததும்

இருந்ததும் இழந்ததும்

நிறங்களோடும் மணங்களோடும்
புழங்கித்தீரா நிராசைகள்
இழையங்களையெல்லாம்
திசைகள் நான்கில்
இழுத்துச்செல்லுகின்றதாகவொரு
மனோரணம்

நேற்றிரவுத்துவங்கிய அற்பத்தூறலின்
தூவனம்நின்ற பொழுதொன்றில்
நெடுவிதானத்தினூடே
ஊடுருவுகிற பஞ்சிதங்களெல்லாம்
கற்பனைகளுக்கு ஊற்றுக்கண்களாகின்றது

மருவிய தட்பவெப்பங்களினால்
மழைக்காலத்தும்பிகள்
மரித்துக்கொண்டிருக்கின்றன
குடங்கைகள் சுமந்த
பச்சைசிசிரநெடிகளின்று
வறட்சியின் அழற்சியினாலே
துர்வாசந்தெளிக்கின்றன

பித்துப்பிடித்தவனின்
சங்கிலியிலடைப்பட்ட பாதங்கள்
தப்பிக்கத்துணிந்து ஏமாறுவதைப்போலே
பருவம்பூத்த நீலத்தாடகப்பூவொன்றின்
விழிக்காதவிழிநீரின்
சிறைப்பட்ட அவலங்களின்வைகறை
எப்போதுவிடியுமோ ??

வழக்கமானக் கனவுகளிலும்
காரிருட்மட்டுந்தான் தெரிகின்றது
அவளுடனான கனவுகளில்மட்டும்
வண்ணங்கள் பிறப்பதெப்படியோவென்றேன்
இருளென்பதால் பஞ்சவர்ணக்கிளியுங்கூட
கருப்பாகிடுமாவென்றாள்

இமைகளை மூடுகின்றவேளையிலும்
அச்சம்பிறக்கிறது
கனவிலே பதியமிட்ட முத்தக்கறைகளை
பத்திரப் படுத்தலாமென்றால்
துயில் விழித்ததும்
அவளைப்போலவே அதுவும்
காணாமற்போய்விடுமோவென்பதால்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (21-Mar-14, 4:14 am)
பார்வை : 98

மேலே