குறும்பாக்கள் - சிவநாதன்

******************************
மாமியார் கொடுமை
கண்ணீர் கதை
பேசியது வெங்காயம்
********************************
உச்ச ஸ்தாயி
கேட்க முடியவில்லை
பாடியது காகம்
*******************************
விழித்திருந்தது வீதி
உறங்கிப் போனது
தெரு விளக்கு
*******************************
கசக்கிப் பிழிகிறான்
வெளுக்கவில்லை
வாழ்க்கை
**********************************
காய்ந்து வரண்டது
கறுக்கவில்லை
பாத்தியில் உப்பளம்
************************************
கும்பமேளா தீர்த்தம்
சாதுக்கள் குளியல்
சீற்றத்தில் கடவுள்
**************************************

எழுதியவர் : சிவநாதன் (21-Mar-14, 6:55 am)
பார்வை : 121

மேலே