பணமா பாசமா

பணமென்னும் காகிதத்தால்
பலபேர் மாறிட்டார்
குணம்தன்னை மதித்திடவே
அவரெல்லாம் மறந்துட்டார் .....

இருக்கின்ற இருப்பாளே
அவருன்னை மதிக்கிறார்
இல்லாத மனிதரையோ
ஏளனமாய் பார்க்கிறார் .......

காசுக்காய் சண்டைகள்
அன்றாடம் நடக்குது
காசாலே பலகொலைகள்
அனுதினமும் தொடருது ........

பொன் பொருளை தேடியே
புலர்கிறார் மனிதரே
பொய்யான நடிப்போடே
வாழ்கிறார் உலகிலே ......

பாசமாய் இருந்தவனை
பணமோ மாத்துது
பாசம்கொண்ட மனிதனையோ
பங்காளி ஆக்குது ........

தூக்கி வளர்த்த தந்தையையும்
தூக்கி எரிந்து பேசுது
அப்பன் பாக்கெட்டுலே பணம் திருடி
பலசெலவை பார்க்குது ......

வாயில்லா காசைத்தான்
உலகமே தேடுது
மனம்கொண்ட மனிதனையோ
அதுதேட மறுக்குது ......

சுவாசம்போன மனிதகூடு
சுடுகாடு போகுது
சுவாசமில்லா காசைத்தான்
பலமேடை தேடுது .......

கந்தலான காசுக்கு
இருக்கும் மதிப்பிலே
கந்தலாடை கட்டிய
மனிதனுக்கு இங்கில்லே .....

பேசாத காசுதான்
பேசுது சபையிலே
பெரும்பாலும் மனிதர்கள்
பேசத்தான் முடியலே .......

மனிதனின் தகுதியாய்
பணத்தைதான் பார்க்கிறார்
பணமில்லா மனிதனை
மதித்திட மறுக்கிறார் .......

கற்ப்புகூட காசாலே
வியாபாரம் ஆகுது
கல்லறைக்கு போககூட
உடல் காசுதனை தேடுது .....

சில்லறைக்கு இருக்குது
மதிப்புதான் உலகிலே
சிந்திக்கும் மனதிற்கு
இல்லையே உலகிலே .......

பணமென்னும் பேயாலே
பாசமோ தோற்க்குது
பணமெல்லாம் போனாலே
மனம் மெல்ல உணருது ........

அப்பனென்றும் மகனென்றும்
ரத்த உறவு இருக்கலாம்
அப்புறமாய் காசுக்காய்
ரத்தம் கூட ஒழுகலாம் .......

சம்பாதிக்கும் புருஷனையே
பொண்டாட்டி மதிக்கிறா
காசு பணம் இல்லாவிட்ட
அவ ஏசி பழிக்கிறா .......

பிறந்தபோது நீ திரிந்தாய்
அம்மணமாய் உலகிலே
இறக்கும் போதும் உன்னிலையோ
எதுவென்று புரியலே .......

வாழும்போது நாடகம்தான்
எத்தனைதான் மனிதனே
உன் நடிப்பெல்லாம் புரிந்திடுமே
இறுதியில் உண்மையில் .......

எழுதியவர் : வினாயகமுருகன் (21-Mar-14, 12:37 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 1477

மேலே