தேர்தல் பிரச்சாரம்

பூச்சிகளின் தேர்தல் பிரசாரத்திற்கு
புதுப் புது ஒலி பெருக்கிகள் - இதோ
புல்வெளியில் வைலட் பூக்கள்.....

க்யொங்க் என்று ஒரே சத்தம்
கொள்கைகள் என்ன என்றுதான்
புரியவே மாட்டேன் என்கிறது......

காது கொடுத்துக் கேட்டேன்.....

வெட்டுக் கிளி ஒன்று
வெடுக்கென்று கட்சி தாவியது......

அது எதிர்பார்த்த
அதிக இடம் - அந்தச் செடி இலையில்.....

மன்னிக்க......

இது தேர்தல் நேரம் - எனவே
இந்த படைப்பும் தணிக்கைக்கு உட்பட்டு
இத்தோடு முடிகிறது.........

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (21-Mar-14, 11:01 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 110

மேலே