உணராயோ தமிழா

உயிர்நிகர் மொழிக்கு உரியவனே - அதன்
உயர்வை உணராத் தமிழ்மகனே!
பயிரினை மேயும் வேலியைப்போல் - தமிழின்
அழிவிற்கே வித்திடும் பேய்மகனே!
உதட்டில் ஏனடா பிறமொழியே? - இனிய
தமிழிருக்க உனக்கேன் இக்கதியே!
விதிசெயல் என்று சொல்வாயோ! - வீணர் விரித்த வலையில்தான் வீழ்வாயோ
அமிழ்தம் தமிழின் சுவையடா! - அது
அறிவொளி ஊட்டும் அறமடா!
இமிழ்கடல் சூழ்ந்திட்ட நல்லுலகில் - இனி
தமிழ்தான் வெல்லும் நிச்சயமடா!!!

எழுதியவர் : குழலோன் (21-Mar-14, 12:47 pm)
பார்வை : 137

மேலே