வெண்பாக்கள் கலைக்கு - விவேக்பாரதி

நேரிசை வெண்பாக்கள் :
=====================
இளமை !

மோகத்தால் உன்னையும் ஈர்க்கும் விசையிதுவாம்
வேகமாய் மாற்றும் திசையிதுவாம் - சோகமும்
கெட்டதும் சட்டெனப் பற்றிடும் உன்னையே
பட்டபின் எண்ணலும் பாழ்

==========
ஏன் யுத்தம் ?

போரினில் இத்தனை காயங்கள் ஏன்கூறு
பாரினை ஆழுகின்ற மன்னனே - தேரினில்
வீண்பேதம் பார்த்துவிட்டால் சக்கரம் சுற்றுமோ
வேண்டாம் ! கொலைகள் விடு

==========
ஏழ்மை விரட்டு !

பயிர்செய்ய இல்லையே பாரினில் எண்ணம்
உயிர்கொல்லல் மட்டுமேன் திண்ணம்? - துயிலெழுந்து
ஏழ்மையைப் போக்கநீ ஏரெடு மண்தொடு
தாழ்வினை நெஞ்சில் சிதை !

==============
இது 185666 இல் கலை அவர்கள் எழுதிய வெண்பாக்களின் திருத்தும் .

எழுதியவர் : விவேக்பாரதி (22-Mar-14, 10:13 pm)
பார்வை : 105

மேலே