தாயின் கேள்வி
கோலுனும் வயசுல வாழத்தான் வழி இல்ல ...
அறவயிறு கஞ்சிக்கும் அல்லல் படுறேனே....
கருவறையில் இருதிங்கள் கனவுகளோடு உன்னை சுமந்தேன்
கடைசிகாலத்தில் என்னை காக்க மறந்ததேனோ ...
மழலையாய் நீ என்னை-ஓராயிரம் கேள்வி கேட்க
ஆவலோடு பதில் அளித்தேன் -ஆசையோடு நீ என்னை தழுவ ...
வயோதிக காலத்தில்- ஒரு கேள்வி நான் கேட்க
விட்டு சென்றதேனோ "என்னை முதியோர் இல்லத்திலே "........