உன்னை உணர்

வீட்டைத் துறந்து வெளியே வா
விடுதலை உனக்குக்
கிடைத்துவிடும் !

முடங்கிக் கிடந்தால் வழி குன்றும்
நடக்க நடக்க வழி
தோன்றும் !

எழுந்து நின்று எட்டி வை ,நீ
எடுத்து வைக்கும்
அடிஎல்லாம்

அடையும் தொலைவைக்
குறைத்துவிடும்
அருகே எல்லையை
அடைந்துவிடும் !

உச்சி மலைமீ தேறி நின்றால்
உனக்குக் கீழே ஒரு உலகம்
உன்னைப் பார்க்கும்
அண்ணாந்து !

உயரே உயரே போகும்போதே
உனக்குள் சுருங்கும்
உலக உருண்டை !

உனக்குள் மாற்றம் வரும்போது
உதாரணமாக
' உரு' ப்படுவாய் !

சிறப்புக் குணங்கள் திறம்படவே
திட்டம் தீட்டி
செயல்படனும் !

சிறக்கா மனிதனை தாங்குவதால்
சிறப்பதில்லை
வையகமும்!

கடலின் ஆழம் அறிந்தவனே
மூழ்கி முத்தை
எடுக்கிறான் !

மலராப் பூவும் நனையா மண்ணும்
மணம் வீசுவ
தில்லையே !

எழுதியவர் : படைக்கவி பாகருதன் (21-Mar-14, 4:40 pm)
Tanglish : unnai unar
பார்வை : 129

மேலே