ரங்கநாதன் கவிதைகள் - நல்ல தங்காள் போட்ட விதை

ஒத்தப் புள்ளி ஓவியமாம் ;
ஒரு சொல்லு காவியமாம்
அத்தனையும் அழகுதாண்டி குப்பாயி - அது
அரசன்காரன் கிழிச்ச கோடு குப்பாயி

சொரண்டி சாயங்கட்டி
சித்தாடை நகை அணிஞ்சா
சேத்துப் பன்றி பேரழகாம் குப்பாயி - அது
சீமானார் போட்ட விதை குப்பாயி

கோழிக்கு புள்ள பொறந்தோம்
குப்பை மேடு உயிலுச் சொத்து
எல்லோரும் மன்னராண்டி குப்பாயி - அது
என்னான்னு வெளங்கலியே குப்பாயி

ஆணி வேரு தானருப்பார்
அன்றாடம் நீர் தெளிப்பார் - நாம
தொட்டியிலே நட்ட மரம் குப்பாயி - அது
தோப்பாகப் போகுதாண்டி குப்பாயி

அழுத விழி குருடாச்சி
அடி வயிறு நெருப்பாச்சி
நாளும் இங்கே கேட்ட கதை குப்பாயி - அது
நல்லதங்காள் போட்ட விதை குப்பாயி

கவிஞர் நரியனுர் ரங்கு
செல் : 9442090468

எழுதியவர் : கவிஞர் நரியனுர் ரங்கு (21-Mar-14, 6:54 pm)
சேர்த்தது : ரங்கநாதன்
பார்வை : 68

மேலே