அளாவல்

அரவமில்லா ஒரு அடர்வனத்தின்
ஏதோ ஒரு மூலையில்
யாருமறியா ஒரு புதர்நிழலில்
யாரோ
பிரசவித்த பெரும் சத்தமாய்
கேட்பாரற்றே முடிகின்றன
என் எப்போதைய
அளாவல்களும் ...

எழுதியவர் : யுவபாரதி (21-Mar-14, 7:47 pm)
Tanglish : alaaval
பார்வை : 101

மேலே