இன்று உலக கவிதைகள் தினம் -மார்ச் 21

பிறக்கும் கவிதை கற்பனையில்
சிறக்கும் பாடல் எழுத்துக்களில்
திறக்கும் இதயம் பூரிப்பில்
பறக்கும் இறக்கைகட்டி வான்வெளியில் !

கவிதைகள் மனதில் தோன்றிற்றால்
கவலைகள் விரைவில் வெளியேறும்
சோகமும் சுகமாய் மாறிவிடும்
சோர்வும் அசதியும் விடைபெறும் !

நித்தம் கவிதையே நீஉதிப்பாய்
நிம்மதி உன்னால் நானடைந்தேன்
நிலைத்தேர் போலே நில்லாமல்
நிழல்போல் என்றும் பின்தொடர்வாய் !!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (21-Mar-14, 11:09 pm)
பார்வை : 493

மேலே