எப்படி பார்த்தாலும் நீதான் பெண்ணே

பொய் சொன்னால் ...
கதை என்கிறாய்!
கதை சொன்னால்
மெய் என்கிறாய்!

கவிதைக்கு நானே கருவாகும் !
உன் கருத்தெல்லாம் அதன் உரமாகும் !
கருவிருந்தால் மண்ணில் முளைக்கும் !
உரம் தந்தாள் செழித்தோங்கும் !

செழிப்புடன் இருந்தால்
மனம் பூத்துக் குலுங்கும்!
மலர் பூத்தால் தானே
வண்டுகள் நாடும்...!

மங்கையவள் கூந்தலை அலங்கரிக்கும்
கூந்தலில் மலர் கண்டு
பல கவி புனையும் கவிஞனுண்டு !
பெண் கண்டால் கவி பிறக்கும்...

கவிதை பெற்றப் பிள்ளை நானில்லை !
கவிதையை நானும் பெறவில்லை !
நான் பெரும் பிள்ளை கவிஎன்பேன் !
கவி எனை தத்தெடுத்த தானென்பேன் !

பொய் தானே கவிதை !
பொய் மெய்யாவது சாத்தியமே !
பொய் பொய்யென நீ உரைத்தால்
மெய்யானதும் பொய்யாகுமோ !

மெய் மெய்யென நானுரைத்தால்
பொய் மெய்யாய் மாறிடுமோ !
கவி நினைத்தால் மாற்றிவிடும் !
காலமதை காட்டிவிடும் !

கவிதை நல்கதைச் சொல்லும்
நல்கதையும் கவியாகும்
மறுசுழற்சியில் நீ மாற்றினாலும்
பொருள் மட்டும் மாறிடதே!

(குறிப்பு : கவிதையை கீழ் மேல் படித்தாலும் மேல் கீழ் படித்தாலும் பொருள் ஒன்றாய் அமைவது போல் இது ஒரு புது முயற்சி)

எழுதியவர் : கனகரத்தினம் (22-Mar-14, 6:45 am)
பார்வை : 84

மேலே