காத்திருக்கும் காதலி இவள்

அசோகவன சீதைபோல்
கள்ளமில்லா வெள்ளை
மனதோடு தங்கமேனியை நீ
மூடிமறைக்க வெண்ணிற
மேக ஆடையணிந்து
முடிகோதி அதில் கோணல்
வகிடெடுத்து ஒய்யாரமாய்
ஓர கொண்டையிட்டு
முழப்பூவை முடிந்துவைத்து,,

பிறைநெற்றியில் அழகு
முழுநிலா திலகம் உன்
வலுவிழந்த சோகப்பார்வை
ஒப்பனையில்லாத உன்
பழுங்கி கன்னம் சூடான
சுவாசத்தால் புடைத்தயுன்
நாசி சுவைதராத
உன்னிதழ் புன்னகை
தகிக்கும் தவிப்பின் தாரகையே ,,,,,

அந்த ஏரிக்கரை ஓரத்திலே
மடியிறக்கிய மண் குடம்
சினுங்கிடும் கைவளையும்
மஞ்சள் துணி பிடித்தே
மங்கையவள் மங்கலமாய்
கண்ணகி போட்டுடைக்க
கெண்டைக்கால் சிலம்பமும்
பாதம்தொட்டு முத்தமிடும்
முத்து முத்தான பாதசுரமும்

யார் வரவுக்கு வழியில்
விழிவைத்து ஏக்கமிகு
பார்வையோடு காத்திருப்பு
காதணிகள் காதோடு
கதைகள் பேச கழுத்தணிந்த
காசுமாலை சலசலக்க
இவையாவும் சட்டைசெய்யா
உன் சோர்ந்த முகம் இது
பசி பினியல்ல பசலைநோய்யே,,,

காதலோடு காதலாய் என்றும் ,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (22-Mar-14, 3:51 am)
பார்வை : 134

மேலே