கதிர் அரிவாளும் - காதலும்

நான் கண்ட ஒரு நாடகத்தை கவிதையாக்க முயற்சிக்கிறேன் குற்றம் இருப்பின் சுட்டி காட்டுக்க தோழமைகளே

கதிர் அரிவாளும் - காதலும்

வெக்கை நிறைந்த
மதிய வேளையில்
கானல் நீரே கண்ணுக்கு
தெரியும் கோடைகாலம்

யாரோ ஒரு கிழவி
கையில் ஆயுதத்துடன்
ஓடி வர
துரத்திக் கொண்டே
குழந்தைகளும்
பைத்தியம்
பைத்தியம் என்று
கொட்டி சிரிக்கிறார்கள்

துரத்தினேன் சிறுவர்களை
தூக்கி பிடித்தேன் கிழவியை
கதறுகிறாள் நான்
பைத்தியம் இல்லையென்று

பாட்டி
கொடு அந்த அரிவாளை
மிரட்சியுடன்
மறுக்கிறாள்

ஊருக்கு புதியவளே
உனக்கு என்ன வேலை
பூதம் காக்கும் புதையலாய்
அருவாளை காக்கிறாய்
யாராம நீ என்றேன் ?

அவள் கண் மூடினால்
காலங்கள் ஓடியது

தீண்டாமை
தீயாய் பரவிய காலம்
வர்ணங்கள்
வேர் பிடித்திருந்த காலம்

வாயகாட்டு வேலையில
கழனி பெருகி
நெல் நிறைந்தது
கானவான் கோட்டையில
கூரை விட்டுகாரன்
கும்பி காய்ந்து கிடந்தான்

கணக்கன் முன்னே வர
மிராசு வந்தாரு பின்னே
மிரட்டி வாங்கிய வேலைக்கு
தந்தாரு கூலிய

கூடினாலும்
குறைஞ்சாலும்
வாய் பேசாதா மக்கள்
கைநிட்டி வாங்கி போனாங்க

முன்ன வந்த மிராசு
குச்சியால தட்டி
கூப்பிடாரு ....

குணவான குமரன
அவன்
மண்ண தெரிஞ்சவன்
மனுசன அறியாதவன்
கிராமத்து கைப்பிள்ளை
ஊருக்கு வேலை செய்யும்
எடுப்பார் கைப்பிள்ளை

நிலத்துக்கு தண்ணி போதுமா
வேலைக்கு தான் ஆளு போதுமா
கேட்டாரு
கேள்விய
இறக்கிய வேட்டியுமா
கூனி போன
முதுகுமா குனிசே
தான் நின்னானே

மண்ண பார்த்த அவன
வார்த்தையில கிழிச்சிட்டு
நகந்து தான் போனாரு
மிராசு மன்னவரு

இருண்ட வானின்
நிலவின் ஒளியாய்
வந்தால் மிராசின் மகள்
தந்தையின் குணம் இல்லா
தளிர் மகள்
ஆம்பல் பூவாய்
சிரிக்கும் தாமரை

இருட்டினில் வந்தவள்
கால் இடறினால்
பின் நழுவினால்
விழுந்தே போனால்
கிணற்றினில்
வாய்நிறைய கதறினால்
கொஞ்சம் கொஞ்சமாய்
குழறினாள்

பதறிய மிராசு
பக்கம் பார்த்தார்
குமரனை அழைத்தார்
குதிக்க சொன்னார்

தயங்கினான்
ஒதுங்கினான்
தொட்டால் திட்டு
நான் எப்படி காப்பது
மிரண்ட குமரனை
மிரட்டிய மிராசு
ஆபத்துக்கு திட்டு இல்லை
தன்னிலை
விளக்கம் தந்தார்

குதித்தான்
காப்பற்றினான்
கரையேற்றினான்
முச்சு காற்றை நிரப்பி
அவளுக்கு
சுவாசம் தந்தான்
முகம் திறந்தால்
அப்போதே
அவள் அகம் திறந்தாள்

காதலுக்கு தெரியுமா
சாதி தான்
அவள் கண்கள்
காதல் நிறைய
இவன் கண்களோ
பயம் அறிய

சந்திப்புகள்
தொடர்ந்தன
இவளின் வற்புறுதலில்
குமரன் அவன்
தொடக்கி விட்டான்
காதலிக்க

அறுவடைக்கு நெல் வளர
காதலும் வளர்ந்தது

காட்டு தீயாய் பரவிய
காதல் கதை
மிராசின் காதுக்கும் வந்தது

வன்மம் மனதில் இருக்க
லாபம் புத்தியில் இருக்க
வெகுண்ட மிராசு

அறுவடை முடிந்தால்
கல்யாணம்
அறிவித்தார் ஊருக்கு...

பட்டை திட்டி
கொண்டு இருந்தான்
கதிர் அரிவாளுக்கு குமரன்
அவன்
காதலை எண்ணி கொண்டு

பதறியே
வந்தாரு மிராசு
குமரனை
ஏரிக்கு போக சொன்னாரு
விரிசல அடைக்க சொன்னாரு
உழவனுக்கு தெரியும்
ஏரி உடைஞ்சா
வினாகி போகும்
வருடத்து உழைப்பு

அரிவாளோட ஓடுன
குமரனுக்கு தெரியாது
காத்து இருக்கும்
கயவன்கள் கையாள
மடிவது நான்தானு

சாட்சிய விட்டு போனாக
அரிவாள
காட்டியம் குறி
சொன்னங்க மண்ணோட போனனே
மகராசன் குமரன்னு ....

பறந்து வந்த பச்சைக்கிளி
ஒப்பாரி வெச்சாலே
உலகம் தான் அதிரும்படி
சாட்சியா கிடந்த அரிவாள
கைல தூக்கி பிடிச்சாலே
இல்லா குமரன
இருக்குறத நினைச்சு
தேட போனாலே
அரிவாளும் தூர்தது
குமரன் தான் கிடைக்கலியே
ஆசை நெஞ்சம் மறக்கலியே

ஊர் ஊரா தேடி
உங்க ஊரு வந்தேனையா ....

கிழவி
கதைய தான் முடிச்சுபட்ட
கல்நெஞ்சும்
கனக்குதையா

காலம் தான் மாறுது
காதல் இன்னும் மாறலியே
காதலுக்கு கஷ்டம் தான்
மாறலியே....


ஊருக்கு
சில குமரன்
எரிஞ்சே தான் போறன
மண்ணோட மறஞ்சு தான் போறனே

காலம் தான் மாறுது
காதல் இன்னும் மாறலியே

பாண்டிய இளவல் (க. மது )

நன்றி - ASIANET comedy express

எழுதியவர் : பாண்டிய இளவல் (க. மது ) (22-Mar-14, 2:45 am)
பார்வை : 104

மேலே