Kadhal

கண்கள் என்று உன்னைக் கண்டதோ
காதல் உதயம்

காதல் என்று என்னைக் கண்டதோ
காலம் உபயம்.

உயர் கனல் போலே
எந்தன் உயிர் கலன் கொதிக்கிறது.

இயலாமையும் இல்லையென்பதும்
வாழயியலா வெறுமை.
நான் வழிந்துப்போகிறேன்.

வாழ்வு அதன் இருகரம் கொண்டு
என்னை எதிபுறம் தள்ளுகிறது.

கெடுத்து வைக்காதவனுக்கு
கொடுத்து வைக்கவும் இயலவில்லை.

இதுவரையிலும் சாத்தியப்பட்ட இரவுகள்
எக்கனமும் தொலையாமல் இருகட்டும்.

அழுகை மறக்க சிரித்து தொலைக்கிறேன்
புன்னகை என்னை புரளி பேசுகிறது
மந்திர புன்னகையேனும் என்னை மாற்றியமைக்கலாம்
தந்திர வாழ்வு அதன் சாமர்த்தியங்களை கூட்டிக்கொண்டே செல்கிறது.

காலனிலை மாற்றம் கொண்டு
பூமி பின்னோக்கி செல்லாதா?

முற்போக்கு எண்ணம் தன்னை
முட்டாள் என்பதனை அறியாதா?

அய்யோ!
கன நேரத்தில் மனம்
கடைனிலையை அடையுதே!

வழித்துணையே என்னை வந்துக் கூட்டிப்போ
வாழ தொலைந்து வழக்கு தொடர்கிறேன்.

உந்தன் பனிக்கூழ் இதழ்கள் எங்கே?
என்னை இச்சையில் உச்சம் கண்ட பச்சை நினைவு எங்கே?

முகமொளிந்த அன்பைக்கொண்டு
என்னை அன்பின் இறுதி அத்தியாயம்வரை கூட்டிசென்றவளே!

பாதைப்போலே இந்த பாவி பரவிக்கிடக்கிறேன்
தேவியே என் ஜீவனே தேர்ப்போல
என் வீதினிறைக்க விஜயம் தாராயோ?

எதிர்வரும் காலங்கள்
உன்னை எனக்கு நினைவு ஊட்டவே
பெண்களை இயற்கை படைத்ததோ!

ஒரே நாளில் உலக பெண்கள்
ஆண்களாக மாறினரோ?

நீ நின்ற இடமெல்லாம்
நீர் வற்றிப்போனாலும்
நிலமெல்லாம் உன்னினைவே!

ஏதேனும் உன் அசைவுகளை
சிந்திவிட்டுப்போகின்றது தனிமை இரவுகள்.

இரவுகளின் ரசிகன் நான்
அதன் கசடுகளில் தங்கிவிட்ட நினைவு ஒழுக்கங்களை
அசைப்போட நின்று நிலவாடுகின்ற
உன் முகம் பொருந்திய ஒளிகள்.

பாலைவனத்தில் நீர்த்தேடி ஒளியும் வேர்ப்போலே
காலவெளியில் உன் உயிர்த்தேடி உருகுகிறேன்.

காதலிக்க கற்றுக்கொடுத்தவனே
இன்று கதியற்று கிடக்கிறேன் ஞானத்தை புகுத்த வா!

"நிலவின் கறைகள் போலே
தோல்வி காதல்கள் நினைவுகளுக்கு அழகு".

யாசகனாய் உன்வாசல் தேடி வரும் நேரம்
வழியடைத்து போனாய்
உன்னினைவுகளை ஏந்திக்கொண்டு
இரவுகளிடம் நீட்டுகிறேன்
நிலவு நினைவுகளை கவர்ந்துக்கொண்டு
சோகங்களை சொற்களுக்கு வழங்கி வருகின்றன.

உன்னை எனதாக்கிக்கொள்ளா
கோழை குணத்தை தைரியமாய் கண்டிக்கிறேன்.

ஆணாக வாழ்வதற்கு அறுகதையற்றுப் போகிறேன்
ஆனாலும் வாழ்வதற்கு அறு-கதை ஈற்றுகிறேன்.

காதலி அருமை பிரிவில்
மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
-வைரமுத்து.

தலைமகளாம் காதலின் கலைமுதலாள்
பாட்டுடை தலைவியாம் பேரிடர் உதவியாம்
உந்தன் மறைமுகம் எங்கே!
உயிர் தளர்கிறேன்.

நிலவுகள் கூடி என்னை
கனவுகளில் உறைய முயல்கிறது
கண்டதொருக்கோலம் காட்சிப்பிழையென்றாலும்
கடவுளை நம்ப மறுக்கிறது மனம்.

இந்த நிலை மாறிவிடக்கூடும்
காதல் தன்னை கடைத்தேற்றும்.

அன்பின் நாலங்களில்
ஈற்றுப்போகின்றது ஒழுக்கம்.
மலைகளை கவனியுங்கள்...

எழுதியவர் : Ramachandran (22-Mar-14, 1:50 pm)
சேர்த்தது : ramj
பார்வை : 65

மேலே