பெண்

தாய்
தூணும் அவள்
துரும்பும் அவள்

தங்கை
உற்ற உறவும் அவள்
பற்று பாசம் அவள்

தோழி
போற்றும் அறிவு அவள்
பழகும் பண்பும் அவள்

காதலி
உலக அழகி அவள்
சுற்றும் அன்பும் அவள்

மனைவி
என் கற்புக்கரசி அவள்
தலைவி துனைவி அவள்

மகள்
என் தாய் அவள்
பார் போற்றும் மங்கை அவள்...

எழுதியவர் : ஈ . சிவசிதம்பரம் (22-Mar-14, 8:25 pm)
சேர்த்தது : சிவசிதம்பரம்
Tanglish : pen
பார்வை : 199

மேலே