அர்த்தமுற்ற ஒருதலை காதல்

நூற்று
எண்பத்தி ஐந்தாவது
அழைப்பு..
உன்
குரல் கேட்ட
நிம்மதிப் பெருமூச்சு..!!

மூன்று
மணிநேர
பாத அசைவில்லா
காத்திருப்பு..
முனுமுனுத்த
உன் வருகையில்
முக்தி நிலை..!!

அறுபது
மணிநேர
அன்னமற்ற விரதம்..
காணலில்
கரைந்துபோன பசி..!!

முந்நூறு
மைல்தூர
தேடல் பயணம்..
முன் வந்து நின்றதும்
முடிந்துபோன பாதை..!!

மெழுகின்
ஒளினுனியில்
கை சத்யாகிரகம்..
இடறிவிட்ட
தீண்டலில் தீர்ந்த சோகம்..!!

பிறந்த நாள்
வாழ்த்திற்கு
முன் பதிவு அழைப்பு..
நடுநிசி தாண்டியும்
நீண்ட பேச்சினில்
பெருமிதம் சுமந்த
விழி நீர் வாழ்த்து..!!

இடையறாத
சிறு கெஞ்சல்கள்..
இணைந்து
எடுத்துக்கொண்ட
முதல் புகைப்படம்..!!

இருவர் மட்டும்
தேநீர் பருகலாம்
என்று
அழைத்த தருணங்கள்..
எந்த இசைவும் இன்றி
இளைப்பாற
துணை வந்த இடைவேளைகள்..!!

இவை
அத்தனையும்
அர்த்தமுற்று
புனிதமானது
அந்த ஒருநாள்
பயணப் பொழுதினில்..
என்
தோள்மீது
சில நாழிகை
சாய்ந்து கொள்ளவா
என்று நீயாகவே கேட்ட
சின்னஞ்சிறு
கணப்பொழுதினில்..!!

எழுதியவர் : வெ கண்ணன் (23-Mar-14, 12:24 am)
Tanglish : arthamutra kaadhal
பார்வை : 258

மேலே