இளைய அரசியல்
தப்புப்பா தப்பு
தப்புத் தப்பா
சொல்றீங்கப்பா
எதுடா தப்பு
இதுதான் சரி
இதுதான் வாழ்க்கை
இப்படி இருந்தாத்தான்
உலகத்துல
பிழைக்க முடியும்
எவன் எப்படி
போனா
உனக்கென்ன
ஒழுங்கா உருப்படுற
வழியப் பாரு
இல்லீன்னா எக்கேடும்
கெட்டுப் போ
இந்த வயசுலேயே
அரசியல் அது இதுன்னு
அலைஞ்சீன்னா
அப்புறம் கஞ்சிக்கு
வழியில்லாம அலையப்போற!
வாழுறதுக்கு
வழியில்லாம அழியப்போற!
டேய் ராசா! அப்பா
சொன்னா கேளுடா
நீ மட்டுமில்ல இனி
நாட்டை யாராலயும்
தூக்கி நிறுத்த முடியாதுடா
எங்களுக்கு நீ வேணும்டா கண்ணா!
மறந்துடுடா அரசியலை
மன்னிச்சுடுப்பா என்னை
மறக்கமாட்டேன்பா உன்னை
தூக்கி நிறுத்த போகலை
சரிஞ்சு விழுந்த அரசியலு
இடிஞ்சு விழுந்து மொத்தமா
தரைமட்டமா ஆகிடாம
இருக்கணும்
என் புள்ளைகளின்
காலத்துல அரசியல்
புனிதமாகி இருக்கணும்
மூச்சு போல காத்து போல
அரசியல்
தூய்மையாகி இருக்கணும்
அதுக்குத்தான் போறேனப்பா
அறுதிவரை போராடவே
உடலுக்குள்ளே குருதியது
இறுதியாக இருக்கும்வரை
ஓய மாட்டேன்
ஒருநாளும்
அழகாக ஆகும்வரை
அரசியலும் என் நாடும்!