புத்தா

அனைத்து புத்தர் சிலையும்
கண்களை மூடிகொண்டிருப்பது,
அனைத்தும் அகத்தே இருப்பதென்று
உணர்த்தவோ..?

என் விதி
பௌத்த மதத்தில் பிறக்காமல்
இத்தனை நாள் இதை அறியாமல்
வெளியில் தேடிக்கொண்டிருந்தேன்...

இனியாவது எதையும் வெளியில் தேடாமல்
அகத்துள்ளே அறிய புத்தி உரைக்கிறது..
அகமான மனமோ உலகை பற்றிய ஆசையை
உருப்பெருக்கம் செய்கிறது..

இந்த மாயத் திரையை அகற்றி
உள்ளதை உள்ளபடி அறிவேனா?
அதை அடக்கி அமைதியை அடைவேனா???

இதற்கெல்லாம் முதலாய்
இன்றே அந்த போதி மரத்தின் விதையை
மனத்துள் விதைக்கிறேன்...
விருட்சத்தின் கனியைப் புசிக்க ஆவலாய்...

அடங்கா ஆசையுடன் ஆசையை அடக்க...

எழுதியவர் : சியாமளா (23-Mar-14, 12:47 am)
பார்வை : 150

மேலே