மரங்களை காப்போம்

மனிதரின் நண்பன் மரங்கள் என்று
உணரும் நாள் என்று தானோ
உலகின் எவர்க்கும் அவசியம் என்று
உணரும் உலகம் என்று தானோ .......

பெருகிவரும் நகர் வலம்
சுருகிப்போம் வன வளம்
காட்டினை மனிதன் அபகரித்தான்
நாட்டில் விலங்கினை வரவிட்டான் ......

மக்கள் தொகையோ பெருகிப்போச்சு
மனிதனின் எல்லை நீண்டு போச்சு
மரங்களை எல்லாம் அழித்த மனிதன்
வறட்சி ஒன்றை வரமாய் பெற்றான் .......

பருவ மழையோ குறைந்து போய்விட
புவியின் வெப்பம் உயர்ந்து போய்விட
ஓசோன் படலம் ஓட்டை கண்டது
உலகின் வாழ்க்கை என்ன ஆவது .......

பனிமலை எல்லாம் உருகி வழியிது
கடல் மட்டமோ உயர்ந்து போனது
கடல் ஓர நகரம் எல்லாம்
கடலில் மூழ்கும் நிலை தோன்றுது .......

மரம் ஒன்றினை இழந்ததனாலே
மனித வாழ்விற்கு கேள்வியானது
நிலை உணர்ந்து மாறு மனிதா
மரம் வளர்த்து வாழு மனிதா ......

வீட்டுக்கு வீடு மரம் வளர்த்து
வீதியனைத்தும் பசுமை செய்வோம்
புவியை நாமும் குளிர்வித்து
பூவுலகை நாமும் காத்திடுவோமே .........

எழுதியவர் : வினாயகமுருகன் (23-Mar-14, 8:31 am)
Tanglish : marangalai kaappom
பார்வை : 1040

மேலே