புறமும் அகமும்
புறமும் அகமும்
--------------------------
கொடி இடை
மான் விழி
கொவ்வை இதழ்
கார்க் கூந்தல்
தாமரை முகம்
என்றெலாம் புற அழகு வர்ணிப்பு
இவை அதனையும்
கண்ணிற்கு பெரு விருந்து
காலத்தால் வரும் இவ்வழகு
காலத்தாலே வஞ்சிக்கப்படும்
இளமை இனித்தாலும்
இளமையை காலம் விழுங்கிவிடும்
மூப்பெய்தாதார் பாரினில் உளரோ
அகத்தின் அழகோ பேரொளி
அணையா தீபம்
கலங்கரை விளக்கம்
காலம் அதை மாய்க்க முடிவதில்லை
புறக்கண்ணால் அதை பார்க்க -
முடிவதில்லை
அகக்கண்கள் விளக்கும் இவ்வழகு
கிட்டிட
"ஊனினை உருக்கி
உள்ளொளி பெருக்கிட வேண்டும்"
புலனடக்கம் தந்திடும்
இம்மோன நிலையே
இம்மைக்கு நேர்வழி
மோட்சம் தரும் ஞான வழி
இவ்வழி கிட்டிடும் ஆயின்
"அகத்தின் அழகு முகத்தில்
தெரிந்திடும்" என்பரே
---------------