கம்பன் பாடா பாசம் ஒன்று
தசரத மன்னன் பெற்றெ டுத்தவள்
தசரத மன்னன் தத்து கொடுத்தவள்
ராக வனுக்கு மூத்த தமக்கை
ரிஷ்ய ச்ருங்கரை மணந்த நங்கை
சாந்தா என்னும் சாந்த குணத்தாள்
கம்பன் பாடா பாசம் ஒன்று..
தம்பி தமக்கை பாசம் அன்றோ?
தம்பியர் அறுவர் பாசம் பாடினான்
தமக்கை பாசம் பாட வில்லை ஏன்...?