அது ஒரு கனாக் காலம்
இரவைக் காணலாம்
நிசத்தில அல்ல
கனவுகளில் ....!
கண்கள் கூசுவதில்லை
உன்னைக் காண
கனவில்தான் ....!
தினம் தினம் நீ
என் கனவில்!
உன் வீட்டில்
தேடுகிறார்களே ?
நேரில் உனைக் காண
ஒரு நொடிக் கூட
காத்திருப்பதில்லை
கடிகாரம் கனவில்...!
உலகத்தில் நீ அழகி
கனவில் மட்டும்
என் தேவதை ....!
நீ கனவில்
வரும்போதெல்லாம்
தாழம்பூ எனைப் பார்த்து
முறைக்கிறதே ...!
நீ என் தாய் போல
தாலாட்டு பாடு
கனவில் கண்விழித்து....!
இரவெல்லாம் விடிகிறது
இரவுக்குத்தான் விடிவே இல்லை
உன்னைக் காணாமல் ...!
மழை பெய்கிறது
நனைந்து விடாதே
இது ஒரு கனாக் காலம் ....!
தினம் எனை
எழுப்பி விடும் கனவு
தூங்க வைத்துப் போகிறது ..!
அது ஒரு கனாக் காலம்
விடிந்து விட்டாலும்
விடுமுறை இல்லை ..!