தென்னம்பூவேகஜல்
தென்னம் பூவே….!! {கஜல்}
*
உயரமாக வளர்ந்திருக்கும்
தென்னம் பூவே
உனைத் தழுவிக் கொண்டு
ரசிக்கிறேனே கீழே நின்னு
*.
கூட்டத்திலே நீயொருத்தி
அழகுடியோ எந்தன் கண்ணே
உனைத் தொடுவதற்கு வெட்கமா
இருக்குதடி தென்னம் பெண்ணே
*.
சிரிக்கும் போது வெடிக்குதடி
தென்னம் பாளை- அந்த
சிரிப்பினிலே சொக்கி போயி
நிக்கிறேனே இந்தக் காளை.
*
காற்றினிலே ஆடியாடி ஓய்யாரமா
அலையுதடிப் பச்சைச் ஓலை
எனக்கு வெஞ் சாமரமாய்
விசுறுதடி விடியற் காலை.
*
யாரும் பார்க்கக் கூடா தென்றா?
சின்னச் சின்ன மஞ்சள் பூவே
மறைந்து நீயோ அழகாகப்
பூத்திருக்கிறாய் தென்னம் பூவே
*.
உதிர்ந்து வந்து விழுந்து விடு
என் இதயத்தின் மேலே
உனை நெஞ்சில் அணைச்சி
கொஞ்சிடுவேன் தென்னம் பூவே
*.
குலை குலையாய் தொங்குதடி
இளநீர்க் காய்கள்
உன் மேலே விழுந்துப் புரண்டுத்
திரியுதடி சின்னச் சின்ன அணில்கள்
*
உனை வெட்டும் போது
துடிக்கும் எனது இதயத்தைப் பாரு
உதட்டில் வைச்சிக் குடிக்கும் போது
நெஞ்சுக்குள்ளே இறங்குதடி இளநீரு
*.
இளநீரு கொடுத்து எம் மனசை
இளக வைத்தாயே - எப்போ
என் காதல் வேகத் தாகத்தையே
தணிய வைக்கப் போ.கிறாய்?
*
இந்தத் தோப்புக் குள்ளே விளையாடி
கொஞ்சி மகிழ்ந்திடு வோமா?
அந்த நிலவைத் தூரப் போகச் சொல்லி
ஆணை யிடுவோமா?
*