கடவுள் எங்கே -
கடவுளைக் கண்டீரோ?
----------------------------------
கடவுளைக் கண்டதுண்டோ என்று கேட்டார்
காற்றைக் கண்டதுண்டோ நான் கேட்டேன்
இல்லை ஆனால் உணர்ந்ததுண்டு என்றார்
கடவுளை நானும் கண்டதில்லை -ஆனால்
உணர்ந்ததுண்டு மெய்யில்,மழலையில் மற்றும்
தூய்மையில் நல்லோர் சேர்க்கையில் என்றேன்