கன்னிகள் ஏனோ நாடுவதும் என்னை

​ஊர்கோடியில் ஒரு பிள்ளையார்
ஒற்றைநாடியில் இம்முல்லை யார் !
வண்ணமிகு மலர் ஒன்று இங்கே
எடுத்து கோர்க்கிறது மலர்களை !

பொன்மாலைப் பொழுதினிலே
பூமாலை தொடுக்கும் பூமகளே
பாமாலை பாடிடும் இதயத்தை
நன்மாலை சூடும் நாயகன்யாரோ !

வண்ணப் பட்டு ஆடை கொண்டு
வாசமிகு மல்லிகை செண்டுஒன்று
வாடிய முகமுடனே வீற்றிருப்பது
தேடிடும் சுந்தரனை காணாத சோகமா !

நாடி வந்த நங்கையை கண்டதும்
நகைக்கின்றாரோ பிள்ளையாரும் !
கணினி வழியே தேடும் இக்காலத்தில்
கன்னிகள் ஏனோ நாடுவது தன்னை என !

மின்னஞ்சல் முகநூலென முறைகள் இருக்க
மின்னிடும் முகம்நீயோ முறையிட என்னிடம்
ஓடி வந்ததும் ஏன்தான் ஒருநொடி யோசித்திடு
கிட்டிடுவான் ஒருவனும் சிட்டுநீ பறந்திடுவாய் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (25-Mar-14, 9:02 am)
பார்வை : 191

மேலே