என் காதல் கதை பகுதி 17

மறக்க ஒரு மனம்
நினைக்க ஒரு மனம்
வாழ நினைத்தால்
காதல் மறிக்கும் நிலை வரும்
எனக்கான நேரம் சரியில்லை நாளும்
என நொந்து கொண்டே முடியும் தேடல்
அவள் பார்வை படுகின்ற நேரம் மட்டும்
மீண்டும் பிறந்ததாய் மனசுக்குள் தோன்றும்
என் கவிதை அவள் தானாய்
ரசிக்கின்ற தருணம்
பிறந்த குழந்தையாய் என் வயதை
பாவிக்க தோன்றும் ..........
சுலபமாய் சொல்லிடும் கவிதை போல்
வாழ்வும் சொல்லிட முடிந்தால்
தோல்வி என்னும் சொல்லி
வாழ்வில் இல்லாமல் போகும் ......
புரிதல் கொண்டு பிரியமாய் நடந்தால்
பிரிதல் காணாமல் பிரிந்து போகமால்
வாழ்க்கை முடியும் வரை
வளமாய் வாழலாம் என்று தத்துவம்
சொல்லி சின்னதாய் சிரித்தாள்.......
முதல் காதல் அவளுக்கு
இரண்டாம் காதல் எனக்கு '
பிரிக்க முடியா மனக்கணக்கு
முடிவின்றி தொடருமா இந்த வழக்கு ...
இன்னும் தொடரும் என் காதல் கதை ..........