என்னை திருடியவளே

கண்கள் வழி புகுந்து
உள்ளம் அதில் நிறைந்து
நிரந்தரமாய் இருதயத்தில்
நீங்காமல் இருப்பவளே ........

இருதயத்தின் இயக்கமாய்
எண்ணங்களின் உறைவிடமாய்
கற்பனையின் தாயகமாய்
கனவுகளின் பிறப்பிடமாய் ......

என்னை இயக்கம் சுவாசமாய்
என்னில் இயங்கும் ரத்த ஓட்டமாய்
சிந்தனையும் செயலுமாய்
என் செயல்படுத்தும் சக்தியாய்.......

காலை சூரியனாய்
மாலை சந்திரனாய்
தென்றல் காற்றாய்
தீண்டும் ஸ்பரிசமாய் ........

இனம் புரியாத இன்பமாய்
எல்லை இல்லாத மக்ழ்சியாய்
எழுத முடியாத உணர்வுகளாய்
ஏங்க வைக்கும் நினைவலையாய் ........

அறிமுகமில்லாத உன்னை
நான் அறிந்து கொண்ட நேரத்தில்
சொர்கத்தின் சுகமெல்லாம்
எனக்கு சொந்தமானதாக நினைப்பு ....

ஒரப்பார்வையில் ஓராயிரம்
மின்னல் கீற்றுக்கள்
என்னை சுற்றி எந்நேரமும்
ஒலி வட்டங்கள் ......

உன் ஒருத்தியின் உறவால்
உலகமே லேசாகும்
துன்பங்கள் இன்பமாகும்
துயரங்கள் மரணம் தேடும் ......

நாடிநரம்புகளை எல்லாம்
உன் கருவிழி படலம்
சிறை பிடிக்குமோ
என்னை சிலையாக்குமோ .....

எப்படி இருந்தும் என்னை திருடிய திருடியே
காதலுக்கு பின் கல்யாணமில்லை நமக்கு
கல்யாணத்திற்கு பிறகுதான் காதல்
காலம் முழுதும் உன் அன்பு சிறையில் -கைதியாகவே நான் ,,,,,

எழுதியவர் : வினாயகமுருகன் (26-Mar-14, 6:30 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 123

மேலே