முதல் முறை

முதல் முறையாக என் கண்கள் கலங்கியது...
"வரதச்சனை கொடுமையில், புது மணப்பெண் பலி"
ஓர் நாள் - தினசரி நாளிதழில் சில வரிகள்...
பலருக்கு இது ஒரு செய்தி ...
எப்படி சொல்வேன்.!!!
"அது என்னவள் என்று"...
வழி மறுத்த இமைகளையும் தாண்டி - என்
கண்ணீர் துளிகள் கன்னம் நனைத்தது
அரவணைத்து கொண்டது என் விரல்கள்
அவள் நினைவுகளையும் சேர்த்து...
இப்படிக்கு
-சா.திரு -