முல்லை சிரித்தது தோட்டத்தில்
முல்லை சிரித்தது தோட்டத்தில்
.......வெள்ளை மகிழ்ந்தது பூக்களில்
சொல்லை உதிர்த்தாய் தேனிதழ்களில்
......கிள்ளை நாணி தாவியது கிளைகளில்
வில்லை முறித்தான் ராமன் அவையினில்
......மகிழ்ந்தாள் காதல் சீதை மனதினில்
சொல்லைக் கோர்த்தேன் நான் தமிழினில்
......சொல்லமுதமாய் நீ விரிந்தாய் கவிதையில் !
----கவின் சாரலன்