திருடர்களின் தீர்மானம்

இனி கொலை,கொள்ளை
வேண்டாம் ...

ஓட்டம் , ஒளிவு
நிறுத்தம் ...

நம் சட்டங்கள்
சட்டமாகட்டும்...

புதிய பெயர் வைப்போம் ...

நாமெல்லாம் 'சீர்திருத்தவாதிகள் ''...
சீராக இல்லாததை சீர்திருத்துவோம்

நாட்டின் செல்வங்களை
பாதுகாப்போம்...

நம் 'எல்லை'' பாதுகாப்பில் ...

பெண்களை மதிப்போம் ...
விரும்பிய பெண்களுக்கெல்லாம்
'மரியாதை'' கொடுப்போம்...

வசதி படைத்தவர்களுக்கெல்லாம்
'வளைந்து' கொடுப்போம் ...

கல்வியை வெறும்
காட்சியாக்குவோம் ...

இன்னும் தீர்மானங்கள்
வரவேற்க்கப்படுகின்றன..

உறுப்பினர்களில் ஒருவன்
கூவுகிறான்...

தலைவரே ...
மேற்கூறியவைகளை
யாரோ செய்துகொண்டிருப்பதாய்
ஞாபகம்....

இல்லை உறுப்பினரே ...
இது அவர்கள் செய்வதை விட
மேலானது .....

கவலைகளோடு க நிலவன்

எழுதியவர் : க நிலவன் (27-Mar-14, 1:56 pm)
சேர்த்தது : க நிலவன்
பார்வை : 71

மேலே