தாம் பத்தியம்
சொல்லாமல் கொள்ளாமல்
நானிருக்க,
சொல்லவருவதை சொல்லாமல்
நீயிருக்க,
வாழ்வது வாழ்கை.,
வருடங்கள் தேய்ந்து
மறைந்த போதும்,
பிரச்சினை இல்லை,
பிக்கு இல்லை.
நினைப்பதெல்லாம் நடந்தன.
நினைவெல்லாம் மலர்ந்தன.
என்ன சுகம் பெறவில்லை.
எடுத்துச் சொல்ல யாருமில்லை.
கைகோர்த்து களித்திருப்பது,
மட்டும் வாழ்க்கையில்லை.
கை பிடித்தவள் கலங்கா திருக்கவேண்டும்.
தாம்பத்தியத்தில்,
"பத்தியம்" உண்டு.
விட்டுக் கொடுக்க வேண்டும்.
நீ பெரிது நான் பெரிது,
எக்காளம் வேண்டாம்.
எடுத் தெறிந்து பேசாமல்,
எது வந்த போதும்,
இணைந்திருபோம்,
என்று சத்தியம் கொள்ளல்,
அதுவே பத்தியமாகும் .